ஐ.பி.எல். போட்டி இங்கிலாந்து வீரர்கள் விலகல்?
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. இது வரை இரண்டு ஐ.பி.எல். போட்டி நடந்துள்ளது. முதல் போட்டி கடந்த ஆண்டு இந்தியாவிலும், 2-வது போட்டி இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது.
இனி வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களால் ஆட முடியாத நிலை ஏற்படும். ஒவ்வொரு நாட்டு வாரியத்துடனும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எதிர்கால போட்டி அட்டவணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2012-20 ஆண்டு வரை ஒவ்வொரு நாடும் விளையாடும் டெஸ்ட், ஒருநாள் போட்டி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்ற நாடுகளை விட அதிகமாக போட்டிகளில் விளையாடுகிறது. 97 டெஸ்ட், 159 ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது.
இந்த போட்டி அட்ட வணையை ஐ.சி.சி. அங்கீகரித்தால் இங்கிலாந்து வீரர்கள் அடுத்த 8 ஆண்டுக்கு (2016 வரை) ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்படும். ஐ.பி.எல். போட்டி நேரத்தில் அந்த அணி வேறு போட்டியில் விளையாட வேண்டிய நிலை இருக்கும்.
இங்கிலாந்து வீரர்களில் பிளின்டாப், பீட்டர்சன், ஒவா சிஷ்ஷா, காலிங்வுட், ரவி போபரா, டிமிட்ரி மாஸ்கரெனஸ் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.
இதில் பிளின்டாப் (சென்னை சூப்பர் கிங்ஸ்), பீட்டர்சன் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்) ஆகியோர் தலா ரூ.7.5 கோடி கொடுத்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment