83-வது இடத்தில் சானியா

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 83-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இரட்டையர் பிரிவில், 3 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸ் (6-வது இடம்), மகேஷ் பூபதி (8) ஆகியோர் தரவரிசையில் அதே இடத்தில் உள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், சோம்தேவ் தேவ்வர்மன் 8 இடங்கள் முன்னேறி 127-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரகாஷ் அமிர்தராஜ் 10 இடங்கள் பின்னடைவு அடைந்து 264-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

0 comments:

Post a Comment