தொடர்ந்து சிக்கலில் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்தர், அணி நிர்வாகத்தை விமர்சித்து புதிய பிரச்னையில் சிக்கியுள்ளார்.

கடந்த 2008ல் அக்தர் பாகிஸ் தான் கிரிக்கெட் விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதத்தை எதிர்த்து இன்னும் கோர்ட் படியேறிக் கொண்டு உள்ளார். இதன் காரணமாகவே அணியிலும் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். உடற் தகுதியை காரணம் கூறி உலக கோப்பை "டுவென்டி-20' தொடர், இலங்கைத் தொடரில் அக்தர் சேர்க்கப்படவில்லை. தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி (மினி உலககோப்பை) தொடருக்கான உத்தேச அணியிலும் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

உடற்தகுதி கேள்வி: இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,),"" அக்தர் தனது உடற்தகுதி குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,'' என தெரிவித்தது. இதனால் வெறுப்படைந்த அக்தர்,"" பி.சி.பி., நிர்வாகம் தனக்கு எதிராக சதி செய்கிறது. இதனை சட்டரீதியாக சந்திப்பேன்,'' என "டிவி' யில் கடுமையாக பேட்டி கொடுத்தார்.

விளக்க கடிதம்: இதற்கு பி.சி.பி., செயல்இயக்குனர் ஜாகிர் கான் கூறுகையில்,"" கிரிக்கெட் போர்டு ஒப்பந்த விதிப்படி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க கூடாது. ஆனால் அக்தர் அணி நிர்வாகத்தினரை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு அவர் வரும் 31ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்,'' என்றார்.

0 comments:

Post a Comment