கங்குலிக்கு விருது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலிக்கு ஃபெல்லோஷிப் விருது வழங்கி கெüரவித்துள்ளது லண்டனில் உள்ள சென்ட்ரல் லங்காஷையர் பல்கலைக் கழகம்.

பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் விருதைப் பெற்றபின்னர் கங்குலி பேசியது:

லங்காஷையருடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு உண்டு. 13 ஆண்டுகளுக்கு முன்பு முதல் ஒருதின போட்டியை இங்குள்ள ஓல்டு டிராஃபோர்டில்தான் தொடங்கினேன். கவுன்டி போட்டியில் லங்காஷையருக்கு விளையாடியுள்ளேன்.

இருந்தாலும் 2000-ம் ஆண்டு பங்கேற்ற போட்டி எனது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. அப்போது 10 டிகிரி குளிரில் ஸ்லிப்பில் பீல்டிங் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். பேன்டிலிருந்து கையை எடுக்க முடியாத அளவுக்கு பயங்கரமான குளிர் அது. எனது நிலையை உணர்ந்த மைக்கேல் ஆதர்டன், என்னை மிட்-ஆன் திசைக்கு அனுப்பி பீல்டிங் செய்யச் சொன்னார். பின்னர் உடலை சூடாக்கும் சில உபகரணங்களுடன் அப் போட்டியைச் சமாளித்தேன். அது என்றுமே மறக்கமுடியாத அனுபவம்.

தற்போது லங்காஷையர் பல்கலைக் கழகம் வழங்கியுள்ள இந்த விருது எனக்கு மிகப்பெரிய கெüரவமாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் கங்குலி.

கடந்த ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கங்குலி, 113 டெஸ்ட் போட்டிகளிலும், 311 ஒருதின போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

0 comments:

Post a Comment