சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் செவ்வாய்க்கிழமை துவங்குகிறது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் மோதவுள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 1998-ல் துவங்கின. அப்போது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக நடைபெறவுள்ளன. மொத்தம் 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்பவை.

முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும்.

1998-ம் ஆண்டு நடந்த ஐசிசி மினி உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியதில்லை.

இந்நிலையில் 2009-ம் ஆண்டு போட்டியை கைப்பற்றும் எண்ணத்துடன் தென்னாப்பிரிக்கா களம் காண்கிறது. கிரீம் ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வலுவுடன் உள்ளது. பேட்டிங், பெüலிங், ஃபீல்டிங் என அந்த அணி எதிரணிகளுக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ள கூடுதல் சிறப்பு.

தென்னாப்பிரிக்க அணிக்கு சற்றும் சளைத்ததில்லை இலங்கை அணி. சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்டபோதிலும் இலங்கை அணி வலுவானதாகவே காணப்படுகிறது.

2002-ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இணைந்து கோப்பையைக் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்

இலங்கை: குமார் சங்ககரா (கேப்டன்), திலகரத்னா தில்ஷன், ஜயசூர்யா, ஜயவர்த்தனா, திலினா கண்டம்பி, கபுகடேரா, குலசேகரா, மலிங்கா, மாத்யூஸ், அஜந்தா மெண்டிஸ், முரளிதரன், தம்மிகா பிரசாத், திலன் சமரவீரா, உபுல் தரங்கா, திலன் துஷாரா.

தென்னாப்பிரிக்கா:

கிரீம் ஸ்மித் (கேப்டன்), ஜோஹன் போத்தா, ஹஷிம் ஆம்லா, மார்க் பெüச்சர், ஏபி டிவில்லியர்ஸ், டுமினி, கிப்ஸ், காலிஸ், ஆல்பி மோர்க்கெல், மகாயா நிடினி, வேயன் பார்னெல், ராபின் பீட்டர்சன், டேல் ஸ்டெயின், லோன்வாபோ டிசோத்சோபே, ரோல்ப் வான் டெர் மெர்வ்.

போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்குத் துவங்கும். ஈஎஸ்பிஎன் } ஸ்டார் ஸ்போர்ட்ஸில் போட்டிகளை நேரடியாக காணலாம்.

போட்டி அட்டவணை

செப்டம்பர் 22 : தென்னாப்பிரிக்கா - இலங்கை.

செப்டம்பர் 23 : பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள்.

செப்டம்பர் 24 : தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து.

செப்டம்பர் 25 : இங்கிலாந்து - இலங்கை.

செப்டம்பர் 26 : ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள்.

செப்டம்பர் 26 : இந்தியா - பாகிஸ்தான்.

செப்டம்பர் 27 : நியூஸிலாந்து - இலங்கை.

செப்டம்பர் 27 : தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து.

செப்டம்பர் 28 : இந்தியா - ஆஸ்திரேலியா.

செப்டம்பர் 29 : இங்கிலாந்து - நியூஸிலாந்து.

செப்டம்பர் 30 : பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா.

செப்டம்பர் 30 : இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள்.

அக்டோபர் 2 : முதல் அரை இறுதி.

அக்டோபர் 3 : 2-வது அரை இறுதி.

அக்டோபர் 5 : இறுதி ஆட்டம்

0 comments:

Post a Comment