தென்னாப்பிரிக்காவை வெல்வது கடினம்: ஸ்டெயின்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் எங்களை வெல்வது கடினம் என்று தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கூறினார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கடந்த ஓராண்டாகவே நாங்கள் ஒரு தின கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறோம். எனவே எங்களுடன் யாரும் போட்டியிடுவதற்கு பயப்படவேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபியில் எங்களை வெல்வது மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும். எங்கள் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் சமாளிப்பது மற்ற அணிகளுக்கு கடினமாக இருக்கும் என்றார் அவர்

0 comments:

Post a Comment