வெஸ்ட் இண்டீசை வெல்வது எளிதல்ல அப்ரிடி கருத்து

சாம்பியன் கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் கேப்டன் யூனுஸ்கான் இன்று ஆடவில்லை.

எனவே அப்ரிடி கேப்டன் பொறுப்பை வகிக்கிறார். இன்றைய போட்டி குறித்து அப்ரிடி கூறியதாவது:-

எந்த அணியையும் நாங்கள் சாதாரண அணியாக எடுத்துக்கொள்ளவில்லை. வெஸ்ட் இண்டீசை எளிதாக வெல்ல முடியும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை.

எங்களிடமும் 11 வீரர்கள் உள்ளனர். அவர்களிடமும் 11 வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் சமபல அணி. யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் நாங்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment