தென்னாப்பிரிக்கா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

மும்பையில் இருந்து துபை செல்லும் அணி, அங்கிருந்து ஜோஹன்னஸ்பர்குக்கு செல்கிறது.

8 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறுகிறது.

2002-ல் இலங்கையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் கூட்டாக வென்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் செப்டம்பர் 20-ம் தேதி இந்தியா விளையாடுகிறது.

இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் செப்டம்பர் 26-ல் மோதுகிறது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 3 நாடுகள் போட்டியில் வென்றதால், சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் தன்னம்பிக்கையுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுள்ளது.

அணி விவரம்: சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், ராகுல் திராவிட், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அபிஷேக் நாயர், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பிரவீன் குமார், ஆசிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக். பயிற்சியாளர்: கேரி கிர்ஸ்டன்.

0 comments:

Post a Comment