103 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்குகிறது. முன்னதாக இந்தியா- நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற பயிற்சி ஆட்டம் போட் செப்ஸ்ட்மே நகரில் நேற்று நடந்தது.

இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது.

302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் இந்தியா களம் இறங்கியது.

தொடக்க வீரர்களாக தினேஷ்கார்த்திக், டிராவிட் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதலிலேயே இருவரும் அடித்து ஆட ஆரம்பித்தனர். அது கை கொடுக்கவில்லை. தினேஷ்கார்த்திக் 20 ரன்களிலும் டிராவிட் 37 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ரெய்னா 31 ரன்களில் ரன் அவுட் ஆகி ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் டோனி 9 ரன்னிலும் யூசுப்பதான் 13 ரன்களிலும் யுவராஜ்சிங் 9 ரன்களிலும் அவுட் ஆனார்கள். நாயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி 41 ரன்கள் எடுத்தார்.

40.3 ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.

இதனால் நியூசிலாந்து 103 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

0 comments:

Post a Comment