உசைன் போல்ட் வெற்றி

கிரீசில் நடந்த உலக தடகள தொடரில் ஜமைக்காவின் உசைன் போல்ட், 200 மீ.,ஓட்டத்தில் தங்கம் வென்றார். கிரீசின் திசலோனிகி நகரில் உலக தடகள தொடர் நடக்கிறது. இதில் 200 மீ., பைனலுக்கு ஜமைக்கா வீரர், ஒலிம்பிக் சாம்பியன் உசைன் போல்ட் தகுதி பெற்று இருந்தார்.

நேற்று நடந்த பைனலில் உசைன் போல்ட், 19.68 வினாடிகளில் கடந்து, தங்கம் வென்றார். அமெரிக்காவின் வாலஸ் ஸ்பியர்மேன் (20.21 வினாடி), ஆன்டிகுவாவின் பிரன்டன் கிறிஸ்டியன் (20.65 வினாடி) அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர்.

இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில்,"" நான் வேகமாகத்தான் ஓட விரும்பினேன். ஆனால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால், உண்மையில் நான் சோர்வாக இருக்கிறேன். இப்போதைக்கு ஓய்வு தான் தேவைப்படுவதால் அடுத்து எந்த போட்டியிலும் பங்கேற்பதாக இல்லை,'' என்றார்.

100 மீ., ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கர்மெலிட்டா ஜெட்டர், 10.67 வினாடிகளில் ஓடிவந்து தங்கத்தை கைப்பற்றினார். இது மூன்றாவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1988ல் அமெரிக்காவின் கிரிபத் ஜாய்னர் (10.49), 1998ல் மரியன் ஜோன்ஸ் (10.65) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

0 comments:

Post a Comment