கிரிக்கெட் தரவரிசை டோனி மீண்டும் முதலிடம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய கேப்டன் டோனி 825 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை தக்கவைத்து உள்ளார்.

அதே போல இந்திய வீரர் யுவராஜ்சிங் 778 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தக்கவைத்து உள்ளார். 3-வது இடத்தில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் சந்திரபால் இருக்கிறார்.

முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் தெண்டுல்கர் (7-வது இடம்), ஷேவாக் (9-வது இடம்) ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

ஆல் ரவுண்டர் பட்டியலில் யுவராஜ்சிங் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.


ஒரு நாள் அணி தரவரி சையில் தென்ஆப்பிரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.


பந்து வீச்சாளர் வரிசையில் முதல் 10 இடத்தில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இதில் இலங்கை வீரர் குலசேகரா முதலிடத்திலும், நியூசிலாந்து வீரர் வெட்டோரி 2-வது இடத்திலும் உள்ளனர்

0 comments:

Post a Comment