சச்சின் பேட்டில் இனி அடிடாஸ் லோகோ
சச்சின் டெண்டுல்கர் இனி தனது கிரிக்கெட் பேட்டில் அடிடாஸ் நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எம்ஆர்எஃப் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்தார். மேலும் சச்சின் தனது கிரிக்கெட் பேட்டில் எம்ஆர்எஃப் லோகோவைப் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் சச்சினுடனான ஒப்பந்தம் முடிந்ததாகக் கூறிய எம்ஆர்எஃப் நிறுவனம் புதிய விளம்பரத் தூதராக கெüதம் கம்பீரை நியமித்தது.
இதைத் தொடர்ந்து இனி தனது கிரிக்கெட் பேட்டில் அடிடாஸ் நிறுவன லோகோவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடிடாஸ் நிறுவன விளம்பரத் தூதராக சச்சின் இருக்கிறார்.
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு நாடுகள் தொடரின் இறுதி ஆட்டத்தில் சச்சின் தனது பேட்டில் அடிடாஸ் லோகோவைப் பயன்படுத்தினார்.
0 comments:
Post a Comment