ரோஜர் ஃபெடரருக்கு அபராதம்

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் ஃபெடரருக்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுமார் 4 மணி நேரம் போராடிய ஃபெடரர், ஆர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவிடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். இப்போட்டியில் கடந்த ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை பட்டம் வென்றவர் ஃபெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெடரருக்கு முன், இப்போட்டியில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் எல்லைக் கோடு பெண் நடுவரை கொன்று விடுவேன் என மிரட்டியதற்காக ரூ.5 லட்சமும், புள்ளியை இழந்த ஆத்திரத்தில் தனது டென்னிஸ் மட்டையை (ராக்கெட்) கீழே வேகமாக அடித்ததற்காக ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இப்போட்டியில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக வெரா ஸ்வோநரேவா, டேனியல் கோயலெரர், கனடாவைச் சேர்ந்த டேனியல் நெஸ்டர் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

2009 யு.எஸ். ஓபன் போட்டியில் மொத்தம் ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என போட்டியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment