தில்ஷன் அதிரடி சதம்: இலங்கை வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படிதென்னாப்பிரிக்காவை இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் செவ்வாய்க்கிழமை துவங்கின. முதல் லீக் ஆட்டம் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளிடையே செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் இலங்கையை பேட் செய்ய அனுப்பியது.

துவக்க ஆட்டக்காரர் சனத் ஜயசூர்யா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் கேப்டன் சங்ககராவும், துவக்க ஆட்டக்காரர் தில்ஷனும் இணைந்து அதிரடியாகவிளையாடி ரன்களைக் குவித்தனர்.

தில்ஷன் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து ஒரு தின போட்டிகளில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 106 ரன்க ளில் அவுட்டானார். 92 பந்துகளில் இந்த ரன்களை எடுத்தார் அவர். சங்கக்கரா 54 ரன்களும், ஜயவர்த்தனா 77 ரன்களும், சமரவீரா 37 ரன்களும், மாத்யூஸ் 15 ரன்களும், கண்டம்பி 6 ரன்களும் எடுத்தனர். ஜயவர்த்தன 61 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 300-ஐ எட்ட உதவினார். இதில் 8 பெüண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். 4-வது விக்கெட்டுக்கு ஜயவர்த்தனாவும், சமரவீராவும் இணைந்து 116 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின், பார்நெல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டுமினி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய தென்னாப்பிரிக்க அணி 37.4 வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. இதனால் இலங்கை அணி, டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி தென்ஆப்ரிக்காவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment