ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 6-வது போட்டியில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் தலா 127 புள்ளிகளுடன் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 20-ந்தேதி நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்றால் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கும்.

2-வது இடத்தில் இருந்த இந்தியா 126 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டது.

பாகிஸ்தான் 4-வது இடத்திலும் (109 புள்ளி), இலங்கை 5-வது இடத்திலும் (108 புள்ளி), நியூசிலாந்து 6-வது இடத்திலும் (105 புள்ளி), இங்கிலாந்து 7-வது இடத்தி லும் (102 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடத்திலும் (78 புள்ளி) உள்ளன.

வங்காளதேசம் (55 புள்ளி), ஜிம்பாப்வே (26 புள்ளி), அயர்லாந்து (25 புள்ளி), கென்யா (0) ஆகிய நாடுகள் முறையே 9 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

0 comments:

Post a Comment