டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின், உலக சுற்றுக்கு 11 ஆண்டுகளுக்குப் பின் முன்னேறியுள்ளது இந்திய அணி. சமீபத்தில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி மோதியது. இதில், ஒற்றையர் பிரிவு, மாற்று ஒற்றையர் பிரிவு போட்டிகளில் அசத்திய சோம்தேவ் தேவ்வர்மன் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகியோரும் சிறப்பாக செயல்பட இந்திய அணி 4-1 கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி உலக சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் கடந்த 1998 ம் ஆண்டு டேவிஸ் கோப்பை உலக சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியிருந்தது....