தெண்டுல்கர் பற்றி விமர்சனம்


மும்பை அனைவருக்கும் சொந்தம், நான் மாராட்டியன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால் அதை விட இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் கூறி இருந்தார்.
 
இதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கண்டனம் தெரிவித்து இருந்தார். அதோடு அந்த கட்சி தெண்டுல்கரை சரமாரியாக விமர்சனம் செய்து இருந்தது. தெண்டுல்கர் மராட்டியர்களுக்காக எதுவும் செய்யவில்லை. சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்று அந்த கட்சி எம்.பி. ஒருவர் தெரிவித்து இருந்தார்.
 
தெண்டுல்கரை விமர்சனம் செய்ததற்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
நான் ஒன்றை சொல்கிறேன். வெளிநாட்டுக்கு சென்றால் நம்மை இந்தியனாகத்தான் பார்ப்பார்கள். இந்தியாவுக்காகத்தான் விளையாடுகிறோம். மராட்டியம், அரியானா மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அணியோடு இணையும் போது இந்தியா தான் முக்கியம். எப்போதுமே இந்தியா என்பதுதான் முதலில் இருக்க வேண்டும் மற்றதெல்லாம் 2-வது தான்.
 
தெண்டுல்கர் சொன்ன கருத்து சரிதான். அதை மதிக்க வேண்டும். அதை பின்பற்ற வேண்டும். அரசியல் வாதத்துக்கு கிரிக்கெட் வீரர்களை வம்புக்கு இழுப்பது தவறானது.
 
தெண்டுல்கர் 20 ஆண்டுகள் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
 
தற்போதுள்ள இந்திய அணி சிறந்த அணியாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இப்படி ஒரு சிறந்த அணி இருந்தது கிடையாது. டோனி கேப்டன் பதவியில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார்

0 comments:

Post a Comment