சச்சினுக்கு சிறப்பு விருது

இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் சச்சின், டிராவிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

பி.சி.சி.ஐ., சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கப்படும். இம்முறை 2008, அக்., 1ம் தேதி முதல் 2009, செப்., 30ம் தேதி வரையிலான காலக் கட்டத்தில் வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

விருது வழங்கும் விழா வரும் டிச.,6ம் தேதி மும்பையில் நடக்கிறது. இதில், 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியதற்காக சச்சினுக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட உள்ளது. இதே போல டெஸ்டில் அதிக கேட்ச்(185) பிடித்து உலக சாதனை படைத்ததற்காக டிராவிட்டிற்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.


"சூப்பர்' காம்பிர்:

சர்வதேச அளவில் இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரருக்கான "உம்ரிகர்' விருதை காம்பிர் பெறுகிறார். இவர் 8 டெஸ்டில் 5 சதம் உட்பட 1269 ரன்(சராசரி 84.6) எடுத்துள்ளார். 21 ஒரு நாள் போட்டிகளில் 670 ரன், 8 "டுவென்டி-20' போட்டியில் 177 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு 5 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதை மொகிந்தர் அமர்நாத் பெறுகிறார். இவருக்கு ரூ. 15 லட்ச ரூபாய் அளிக்கப்படும். இதை தவிர ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு சிறந்த அம்பயருக்கான விருது அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை அம்பயர் அமிஷ் சகேபா பெறுகிறார்.

0 comments:

Post a Comment