மீண்டும் உலக கோப்பை

தற்போதுள்ள இலங்கை அணிக்கு வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) வெல்வதற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது என்கிறார் அணியின் கேப்டன் சங்ககரா.

சமீபகாலமாக ஒருநாள் தொடர்களிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி வெற்றி எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது இலங்கை அணி. படிப்படியாக சர்வதேச ரேங்கிங்கிலும் முதலிடத்தை நெருங்கி வருகிறது. கடந்த 1996ல் அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தானில் நடந்த உலக கோப்பை தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது.

அதன் பின் கடந்த 2007 உலக கோப்பை போட்டியில் பைனல் வரை முன்னேறி அசத்தியது. ஆனால் இம்முறை தங்கள் அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தற்போதைய கேப்டன் சங்ககரா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

கடந்த 1996ல் கோப்பை வென்றது ஒரு வரலாறு. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இதைப்போல மீண்டும் சாதித்து காட்ட விரும்புகிறோம். இம்முறை (2011) உலக கோப்பை போட்டி அட்டவணை வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்து "நாக் -அவுட்' நிலையில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள இலங்கை அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான வீரர்களைக் கொண்டுள்ளது.

இந்திய துணைக்கண்டத்தில் போட்டிகள் நடக்க இருப்பது எங்களுக்கு சாதமானது. அறிமுகமான ஆடுகளங்களில் விளையாடுவதன் மூலம் கோப்பை வெல்ல மீண்டும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

0 comments:

Post a Comment