இந்தியாவில் கிரிக்கெட் விளையாட இலங்கை அணிக்குத் தடை

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவருவதால், அந்நாட்டுக் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. ஜோயல்பவுல் ஆண்டனி தாக்கல்
செய்துள்ள மனு:

இலங்கை கிரிக்கெட் அணி கலந்து கொள்ளும் 20:20 போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட் டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

16.11.2009 முதல் 27.12.2009 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக இலங்கைத் தமி ழர்களை துன்புறுத்தி மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகள் இலங்கையைக் கண்டித்து வந்தபோதிலும் அதை அந்த நாட்டு அரசு பொருட்படுத்தவில்லை.

இலங்கை ராணுவ அத்துமீறல் களால் பல லட்சம் தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். 1.5 லட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்துள்ளனர்.

இந் நிலையில், இலங்கை அணி இந்திய மண்ணில் விளையாடத் தடை விதி க்க வேண்டும் என மனு வில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

0 comments:

Post a Comment