உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த 63 வயது இந்திய வீரர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
63 வயதில் சதம் விளாசி கின்னஸ் சாதனை
குஜராத் மாநிலம் உமர்காமை சேர்ந்தவர் நேவிலி வாடியா. 63 வயதாகும் இவர், கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் வதோதராவில் கடந்த மார்ச். 28 ம் தேதி நடந்த மைனர் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்றார்.
இப்போட்டியில் வாக்ஹோடியா ரோட் மற்றும் ராஜ்தாம் வாட்லி பரிவார் ஆகிய உள்ளூர் அணிகள் மோதின. வாக்ஹோடியா அணி சார்பில் களமிறங்கிய வாடியா, 60 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார்.
இதில், 3 சிக்சர் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் மிக அதிக வயதில் (63 ஆண்டு 305 நாட்கள்) சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இவரது சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம் கடந்த 11 ம் தேதி சான்றிதழ் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment