2011 உலக கோப்பையை தெண்டுல்கர் பெற்று தருவார்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுவர் சச்சின் தெண்டுல்கர். சமீபகாலங்களில் அவரது ஆட்டத்திறன் மேலும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் ஓய்வு பெறுவார் என்ற யூகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடி விட்டு ஓய்வு பெறலாம் என்று தெண்டுல்கர் திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் அவர் அடித்த அதிரடியான ஆட்டத்தை பார்த்து 2015-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாட முடியும் என்று டோனி கருத்து தெரிவித்து இருந்தார்.

தெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய 5 உலக கோப்பையில் விளையாடி விட்டார். ஆனால் அவரால் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தர முடியவில்லை. இதில் 1996-ம் ஆண்டு நல்ல வாய்ப்பு இருந்தது. அரை இறுதியில் இலங்கையிடம் தோற்றதால் வெளியேற்றப்பட்டோம்.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை தெண்டுல்கர் பெற்று தருவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சசாங் மனோகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, தெண்டுல்கர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். 20 ஆண்டுகள் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை அவர் பெற்று தருவார் என்றார்

0 comments:

Post a Comment