தெண்டுல்கர் புதிய சாதனை படைக்கிறார்

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 7 ஒரு நாள் போட்டித் தொடரில் வதோதராவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்னில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 99 ரன்னிலும், டெல்லியில் நேற்று நடந்த 3-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் நாளை (2-ந்தேதி) நடக்கிறது.

இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருவதால் 3-வது வெற்றி கிடைக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது. கேப்டன் டோனி, யுவராஜ்சிங், காம்பீர், ஷேவாக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதே போல பந்து வீச்சும், பீல்டிங்கும் நன்றாக உள் ளது. ஆஸ்திரேலிய அணி காயத்தால் தள்ளாடி வருகிறது. மைக்கேல் ஹஸ்சி மட்டும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்திய அணி நம்பிக்கையுடன் இருப்பதால் வெற்றி நீடிக்கலாம்.

முதல் 2 போட்டியில் தெண்டுல்கரின் ஆட்டம் எடுபடவில்லை. நேற்றைய ஆட்டத்தில் 32 ரன் எடுத்து “ரன்அவுட்” ஆனார். 230 ரன் இலக்கில் 32 ரன் என்பது நல்ல ஸ்கோர் என்றுதான் சொல்லலாம்.

நாளைய ஆட்டத்திலாவது அவர் 17 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 47 ரன் தேவை. தெண்டுல்கர் 433 போட்டியில் விளையாடி 16,953 ரன் எடுத்துள்ளார்.

நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் தூர்தர்சன், நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

0 comments:

Post a Comment