ஐ.பி.எல்., தொடரில் புதிய அணிகள்

வரும் 2011ம் ஆண்டு நடக்கவுள்ள நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டுதோறும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் உள்ளன. இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் சில நிபந்தனைகள் விதித்துள்ளது.

இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: வரும் 2011ல் நடக்கவுள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகள் பங்கேற்கவுள்ளன. பீல்டிங் செய்ய அதிகபட்சம் நான்கு மாற்று வீரர்களை களமிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது "பிங்க்' நிற பந்தை பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இருந்து வீரர்கள் அனைவரும் ஐ.சி.சி., லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கவனிக்கப்படுவார்கள். மேலும் ஐ.பி.எல்., அமைப்பு, பி.சி.சி.ஐ.,யின் ஊக்கமருந்து தடை சட்டத்தை கடைபிடிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க முடியும். அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி ஐ.பி.எல்., வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படும். தவிர, ஒவ்வொரு அணியிலும் சில வீரர்களுக்கு வழங்கப்படும் நட்சத்திர அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment