சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்துள்ளார்.
30 ஆயிரம் ரன்களை எடுக்கும் முதலாவது வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. ஆமதாபாதில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் சச்சின் 35 ரன்களை எடுத்தபோது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் புரிந்தார்.
1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் தற்போது கிரிக்கெட் வாழ்க்கையில் 21-ம் ஆண்டில் நுழைந்துள்ளார். 20-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அவர் இந்தப் போட்டியில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் போட்டிகள், ஒரு தின போட்டிகள், சர்வதேச டி20 போட்டிகள் என மூன்றிலும் சேர்த்து அவர் தற்போது 30,065 ரன்களைச் சேர்த்துள்ளார்
0 comments:
Post a Comment