விதிமுறை மீறும் பவுலருக்கு சிக்கல்

உள்ளூர் போட்டிகளில் ஐ.சி.சி., விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்துவீசுபவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களது பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுந்தால், உடனடியாக அனுமதி மறுக்கும்படி அம்பயர்களுக்கு பி.சி.சி.ஐ., கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நடந்த உள்ளூர் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளின் போது, பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,)நிர்ணயித்துள்ள 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்து வீசினர். இது குறித்து அம்பயர்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிட்ட 32 வீரர்கள் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் 12 வீரர்கள் ஐ.சி.சி., விதிமுறைப்படி (15 டிகிரி) பவுலிங் செய்கிறார்கள். மீதமுள்ள 20 வீரர்களில் 5 பேர் 15 முதல் 20 டிகிரி வரை கையை வளைத்து வீசுகிறார்கள். அடுத்து 15 வீரர்களின் கை அசைவு 20டிகிரிக்கும் அதிகமாக செல்கிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறியது:
சந்தேகத்துக்குரிய வீரர்களின் பந்துவீச்சு பற்றி ஆட்டம் துவங்கும் முன்பாகவே அணியின் கேப்டனிடம், "மேட்ச் ரெப்ரி' தெரிவித்து விடுகிறார். எனவே, அந்த வீரர் களத்தில் தவறு செய்யும் பட்சத்தில், எச்சரிக்கை செய்ய தேவையில்லை. சர்வதேச போட்டி விதிகளின் படி அந்த பவுலரை தொடர்ந்த பந்து வீச அனுமதிக்காமல் அம்பயர்கள் நிறுத்திவிடலாம். இந்த நடவடிக்கை குறித்து "மேட்ச் ரெப்ரி' அணி நிர்வாகத்திற்கு தெளிவாக தெரிவித்துவிட வேண்டும். இதன் மூலம் அவர்களை மேலும் தவறு செய்ய தூண்டாமல் இருக்க முடியும்.
இவ்வாறு ரத்னாகர்ஷெட்டி கூறினார்.

0 comments:

Post a Comment