பாதுகாப்பு விதிகளை மீறிய தோனி, ஹர்பஜன், யுவராஜ்

போலீஸ் பாதுகாப்பின்றி இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் வெளியே சென்றனர். இதனால் சிறிது நேரம் போலீஸôர் செய்வதறியாது திகைத்தனர்.

மொஹாலியில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-வது சர்வதேச ஒரு தின ஆட்டத்துக்காக இந்திய வீரர்கள் சண்டீகர் வந்தனர். அவர்கள் அனைவரும் சண்டீகர் நகரிலுள்ள தாஜ் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை யுவராஜ் சிங் காரில் வெளியே கிளம்பினார். இதையடுத்து அவருக்கு பாதுகாப்பளிக்க போலீஸôர் வந்தபோது அதை மறுத்துவிட்டு தனது "ஆடி' ரக காரில் வெளியே சென்றார். ஆனால் சென்ற சில மணி நேரத்தில் அவர் ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டார்.

இதைத் தொடர்ந்து தோனியும், ஹர்பஜன்சிங்கும் ஹோட்டலிலிருந்து வெளியே சென்றனர். பாதுகாப்பு அதிகாரிகளிடம் எங்கு செல்கிறோம் என்று தெரிவிக்காமலேயே அவர்கள் சென்றுவிட்டனர். இதனால் வீரர்களைக் காணாமல் போலீஸôர் சிறிது நேரம் தவித்தனர்.

ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டனர். இதையடுத்து போலீஸôர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதுகாப்புக் காரணங்களுக்காக வீரர்கள் வெளியே செல்லும்போது எங்கு செல்கிறார்கள் என்று தெரிவிக்கவேண்டியது கட்டாயமாகும். இதுதொடர்பாக யுவராஜிடம் தெரிவித்தபோது அவர் பாதுகாப்பை மறுத்தார். இதைப் போலவே தோனியும், ஹர்பஜனும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்காமலேயே வெளியே சென்றுவிட்டனர். இது போலீஸôருக்கு பிரச்னையை ஏற்படுத்திவிட்டது.

இதுதொடர்பாக ஹோட்டலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் டி.எஸ்.பி. ரோஷன் லால், எஸ்.பி. எச்.எஸ். தூனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பஞ்சாப் கிரிக்கெட் சங்க அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்படும் என்றார் அவர்

0 comments:

Post a Comment