டி20 உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை துவக்கம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையை போட்டி அமைப்பாளர்கள் துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரி ஹரூண் லோர்கட் கூறியதாவது: டிக்கெட் விற்பனை துவங்கியதும் ஏராளமான பேர் வந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

டிக்கெட்டுகளை குறைந்த விலையில் வழங்குவதால் அடுத்த ஆண்டு போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

0 comments:

Post a Comment