கிரிக்கெட்டில் இனவெறியை தடுக்க புதிய விதிமுறைகள்

கடந்தமுறை ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்சுக்கும், ஹர் பஜன்சிங்குக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதுபற்றி புகார் கூறிய சைமண்ட்ஸ் ஹர்பஜன்சிங் என்னை இனவெறி காட்டி கிண்டல் செய்தார் என கூறினார். இது பெரும் பிரச்சினையை உருவாக்கியது. இதேபோல பல போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் இடையே இனவெறி பிரச்சினை எழுந்துள்ளது.

இதை தடுக்க சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐ.சி.சி.) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதேபோல கிரிக்கெட் சூதாட்டம், ஊழலை தடுக்கவும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

போட்டி காலங்களில் வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிகளை பட்டியலிட்டு உள்ளனர்.

இதுபற்றி ஐ.சி.சி. தலைமை நிர்வாகி ஹரூன்லார்சன் கூறியதாவது:-

பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசித்தும், ஆய்வுகள் நடத்தியும் இந்த விதிமுறைகளை வகுத்து உள்ளோம். வீரர்கள் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது என்ற விவரங்களை தொகுத்து உள்ளோம். இதன்மூலம் கிரிக்கெட் வீரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். போட்டியும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

இந்த விதிமுறைகள் நட்பு ரீதியில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. நமது அடுத்த தலைமுறையும் கிரிக்கெட்டை ரசிக்கும்படி கொண்டு செல்வதற்கு இதுபோன்ற விதிமுறைகள் அவசியாகிறது.

தவறாக புரிந்து கொள்ளுதல், குழப்பம், மொழி தெரியாமை ஆகியவற்றாலும் இனவெறி என தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுபற்றியும் விளக்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்

0 comments:

Post a Comment