அதிரடி தான் சேவக் "ஸ்டைல்


அதிரடியாக ஆடுவது தான் சேவக்கின் பேட்டிங் "ஸ்டைல்'. அவருக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியது: 
சேவக் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். போட்டிக்கு தகுந்து எப்படி விளையாடவேண்டும் என அவருக்கு நன்கு தெரியும். அதிரடி தான் அவரது "ஸ்டைல்'. சேவக் போன்றவர்கள், நாள் முழுவதும் அல்லது பாதி நாளுக்கு களத்தில் நின்று விளையாட வேண்டியதில்லை. 

அவர் தனது இயற்கையான ஆட்டமுறையில் விளையாடினாலே போதுமானது. அவர் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என நாம் அவருக்கு சொல்லத்தேவையில்லை. 


அசத்தல் காம்பிர்: காம்பிரும் அசத்தலான ஆட்டக்காரர். போட்டியின் சூழ்நிலைக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொண்டு, சிறப்பாக விளையாடுவார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நிலையான "பார்மில்' நீடித்து வருகிறார். தேவைப்படும் போதெல்லாம் சதம் அடித்து, அணியை மீட்கிறார்.


பவுலிங் எடுபடும்: ஆமதாபாத் ஆடுகளத்துடன் ஒப்பிடுகையில், கான்பூர் ஆடுகளம் வித்தியாசமாகத் தான் உள்ளது. இருப்பினும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆடுகளம் எப்படி மாறும் என்பதை முன்னதாக தெரிவிக்க இயலாது. 


காலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும் என்பதால், துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவும். இங்கு ஒவ்வொரு நாளும் முதல் ஒரு மணி நேரம் முக்கியமானது. அதன் பின் பேட்டிங் செய்வது எளிது. 


அதேநேரம் கடைசி நாளில் பேட்டிங் செய்வது கடினம். அப்போது ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும். மொத்தத்தில் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். 

இவ்வாறு தோனி தெரிவித்தார்

0 comments:

Post a Comment