அசார் தடையை நீக்க கோரிக்கை


அசாருதினுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குமாறு, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதின். 99 டெஸ்ட் போட்டிகளில் 6215 ரன்களும், 334 ஒரு நாள் போட்டிகளில் 9378 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2000 ல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இவருக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது. 

அதற்குப் பின் அரசியலில் நுழைந்த இவருக்கு காங்கிரசில் இடம் கிடைத்தது. கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போட்டியிட்ட இவர், வெற்றி பெற்றார்.



கோரிக்கை:
 அசாருதினுடன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பல வீரர்கள் தடையிலிருந்து விடுபட்டு விட்டனர். ஆனால் அசார் மட்டும் விடுவிக்கப்பட வில்லை. இதனால் அவரது தடையை நீக்க வேண்டும் என, உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், பி.சி.சி.ஐ.,நிதி கமிட்டி தலைவருமான ராஜிவ் சுக்லா, ஜிதின் பிரசாத், ராஜ் பப்பார் உள்ளிட்ட சிலர், முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சரத்பவாரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.



 இது குறித்து ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" தன் மீதான தடையை நீக்க வேண்டுமென அசார் விரும்புகிறார். சரத்பவாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம். இப்பிரச்னைக்கு பி.சி.சி.ஐ., ஆண்டு கூட்டத் தொடரில் முடிவெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்,'' என்றார்

0 comments:

Post a Comment