உலககோப்பை அட்டவணை அறிவிப்பு

உலககோப்பை கிரிக்கெட் (2011) தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று மும்பையில் வெளியிட்டது. தாகாவில் நடக்க உள்ள முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

ஐ.சி.சி., சார்பில் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் 2011ல் நடக்கிறது. இத்தொடர் பிப்ரவரி 19 ம் தேதி முதல் ஏப். 2 வரை நடக்க உள்ளது. மொத்தம் 14 அணிகள் குரூப் "ஏ' மற்றும் "பி' பிரிவுகளாக இத்தொடரில் மோத உள்ளன.

"பி' பிரிவில் இந்தியா: இத்தொடரின்"ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளும், "பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

முதல் மோதல்: இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்க உள்ளன. இதில், இந்தியா 29 (ஒரு காலிறுதி, ஒரு அரையிறுதி மற்றும் பைனல்), இலங்கை 12 (ஒரு அரையிறுதி, ஒரு காலிறுதி), வங்கதேசம் 8 (2 காலிறுதி) போட்டிகளை நடத்துகின்றன. பிப்ரவரி 19 ம் தேதி தாகாவில் நடக்க உள்ள முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி (குரூப் "ஏ'), பங்கேற்கும் 6 லீக் போட்டிகளும், இலங்கையில் நடக்க உள்ளன. தொடரின் பைனல் போட்டி ஏப்.2 ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது.

0 comments:

Post a Comment