மும்பை அனைவருக்கும் சொந்தம், நான் மாராட்டியன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால் அதை விட இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் கூறி இருந்தார். இதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கண்டனம் தெரிவித்து இருந்தார். அதோடு அந்த கட்சி தெண்டுல்கரை சரமாரியாக விமர்சனம் செய்து இருந்தது. தெண்டுல்கர் மராட்டியர்களுக்காக எதுவும் செய்யவில்லை. சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்று அந்த கட்சி எம்.பி. ஒருவர் தெரிவித்து இருந்தார். தெண்டுல்கரை விமர்சனம் செய்ததற்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் கண்டனம் தெரிவித்து உள்ளார்....