சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரின் அரையிறுதிக்கு லயன்ஸ் அணி முன்னேறியது. இதனால் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் சென்னை, மும்பை அணிகள் வெளியேறுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடர் நடக்கிறது.
இதன் "பி பிரிவில் நடந்த முக்கிய போட்டியில் ஹைவெல்டு லயன்ஸ், யார்க்ஷயர் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய யார்க்ஷயர் அணிக்கு காலே (21), ஜாக்குஸ் (31)கைகொடுக்க, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டும் எடுத்தது.
எட்டிவிடும் இலக்கை விரட்டிய லயன்ஸ் அணிக்கு கேப்டன் அல்விரோ பீட்டர்சன் (19), மெக்கன்சி (13), குயின்டன் (32) ஸ்கோர் உயர உதவினர்.
கடைசி நேரத்தில் டுவைனே (25), சைம்ஸ் (27) அதிரடி கைகொடுக்க, லயன்ஸ் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை "அவுட்:
இதனால் "பி பிரிவில் 12 புள்ளிகள் பெற்ற லயன்ஸ், சிட்னி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில், 2 புள்ளிகள் பெற்ற மும்பை, புள்ளிக்கணக்கை துவக்காத சென்னை, யார்க்ஷயர் அணிகள் தொடரில் இருந்து வெளியேறுகின்றன.
0 comments:
Post a Comment