இலங்கையில் நடந்து வரும் உலக கோப்பை டுவென்டி-20 தொடரில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை 121 ரன்னில் அவுட்டாக்க தவறியதால் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டங்களில் இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுன.
இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி எப் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணி தனது 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தனது கடைசி சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு கொழும்பில் நடக்கிறது. அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை கட்டாயம் வீழ்த்த வேண்டும்.
0 comments:
Post a Comment