சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு. சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், காயம் காரணமாக டுவைன் பிராவோ, அனிருதா ஸ்ரீகாந்த் நீக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பதிலாக குலசேகரா, ஜகாதி இடம் பெறுகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது.
இதில் இந்தியா சார்பில் டில்லி டேர்டெவில்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை அணியின் "ஆல்- ரவுண்டரான' வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை.
இவருக்கு பதிலாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் குலசேகரா சேர்க்கப்பட்டார். அனிருதா ஸ்ரீகாந்த், வலது கழுத்து எழும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.
இவருக்கு பதிலாக இடது ஜகாதி அணியில் இடம் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment