ஆடுகளம் சரியில்லை - ஐ.சி.சி., குற்றச்சாட்டு


இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில், பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்றதாக இல்லை,'' என, ஐ.சி.சி., குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் நடக்கும் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கை நிர்ணயித்த 140 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி, 123/7 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. 

இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை இலங்கை அமைத்தது என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்தார். இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனும் ஏற்றுக்கொண்டார். 

ரிச்சர்ட்சன் கூறியது:

பொதுவாக ஒரு இன்னிங்சில் பயன்படுத்தப்படும் ஆடுகளத்தின் தன்மை, அடுத்த இன்னிங்சின் போது மாறாத வகையில் இருக்க வேண்டும். முதல் அரையிறுதியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ப சாதகமானதாக இல்லை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைத்தது. 

இது இரு அணிக்கும் சாதகம் தான் என்றாலும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள், சொந்த மண் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதிகமான வெப்பம் நிலவுவதால், ஆடுகளம் நன்கு காய்ந்து இருந்ததாக, இதன் தயாரிப்பாளர் கூறினார். இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். 
இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்.

0 comments:

Post a Comment