நாளை இறுதிப்போட்டி - கோப்பையை வெல்வது யார்?


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. 

“சூப்பர் 8” சுற்று முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன. 

நேற்று முன்தினம் அரை இறுதி ஆட்டங்கள் தொடங்கியது. முதல் அரை இறுதியில் இலங்கை அணி 16 ரன்னில் பாகிஸ்தானை தோற்கடித்து. நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் 74 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 

இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இலங்கை அணி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து உள்ளது. 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் அந்த அணி பாகிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. 

கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ஜாம்பவனாக திகழ்ந்த அணி வெஸ்ட் இண்டீஸ் ஆகும். ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை 1975, 1979-ம் ஆண்டுகளில் கைப்பற்றியது. 

அதன்பிறகு அந்த அணி கிரிக்கெட்டில் முக்கியமான போட்டிகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தற்போது 20 ஓவர் உலக கோப்பை வெல்லும் வேட்கையில் உள்ளது. இரு அணிகளும் பலம் பொருந்தியது என்பதால் நாளைய இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. அந்த அணியில் கேப்டன் ஜெயவர்த்தனே தில்சான், சங்ககரா, ஜீவன் மெண்டீஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, அஜந்தா மெண்டீஸ், ஹெராத் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். 

ஜெயவர்த்தனே 6 ஆட்டத்தில் 219 ரன்னும், தில்சான் 6 ஆட்டத்தில் 179 ரன்னும் எடுத்துள்ளனர். அஜந்தா மெண்டீஸ் 11 விக்கெட்டும், மலிங்கா 8 விக்கெட்டும் கைபற்றி உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ்கெய்ல், போலார்ட், சாமுவேல்ஸ், ரஸ்சல் பிராவோ போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் ராம்பால், சுனில் நரீன், சாமுவேல் பத்ரி போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். 

கிறிஸ் கெய்ல் 219 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அவர் இலங்கை பவுலர்களுக்கு சிம்ம சொர்ப்பணமாக திகழ்வார். நாளைய இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு நடக்கிறது. தூர்தர்சன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட்டில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இரு அணி வீரர்கள் வருமாறு:- 

இலங்கை: ஜெயவர்த்தனே (கேப்டன்), தில்சான், சங்ககரா, மேத்யூஸ், ஜீவன், மெண்டீஸ், திரிமானே, சண்டிமால், மலிங்கா, அஜந்தா மெண்டீஸ், ஹெராத், குலசேகரா, பெரைரா, அசிலா தனன் ஜெயா ரெங்கா, முனவீரா. 

வெஸ்ட் இண்டீஸ்: டாரன்சேமி (கேப்டன்), கிறிஸ்கெய்ல், சார்லஸ், சாமுவேல்ஸ், போலார்ட், வெய்ன் பிராவோ, ரஸ்சல், வெய்ன் சுமித், லெண்டில் சிம்மன்ஸ், ராம்தின், ராம்பால், டாரன் பிராவோ, சுனில் நரீன், எட்வர்ட்ஸ், சாமுவேல் பத்ரி.

0 comments:

Post a Comment