இந்திய மண்ணில் மீண்டும் பாக்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான தொடருக்கு, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் அணி இந்தியா வர உள்ளது.  கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடக்கவில்லை. சர்வதேச போட்டிகளில் மட்டும், அவ்வப்போது பொது இடங்களில் மோதிக் கொண்டன. கடந்த ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட, பாகிஸ்தான்...

பயிற்சியில் திணறிய சேவக்

ரஞ்சிக் கோப்பை போட்டிக்கான வலைப்பயிற்சியில் சேவக் திணறியது பெரும் அதிர்ச்சி அளித்தது. இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. சமீப காலமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இவர்,டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிறது.  கடைசியாக 2010, நவ., 4ம் தேதி ஆமதாபாத்தில் நடந்த டெஸ்டில், நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்கள் எடுத்தார். அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து தொடரில் இவரை தான் இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது.  இந்நிலையில், வரும் நவ., 2ம் தேதி துவங்கும் உ.பி., அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் டில்லி அணியின்...

ஐ.பி.எல்., தொடரில் இருந்து விடைபெறுகிறார் சவுரவ் கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 40. ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், முதல் மூன்று ஆண்டுகள் கோல்கட்டா அணிக்காக விளையாடினார்.  2011ல் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. ஒருவழியாக புனே அணி ஒப்பந்தம் செய்தது. சமீபத்திய ஐந்தாவது தொடரில் யுவராஜ் சிங் "கேன்சரால்' பாதிக்கப்பட, புனே அணியின் கேப்டன், ஆலோசகராக செயல்பட்டார்.  இத்தொடரில் புனே அணி கடைசி இடம் பிடித்து ஏமாற்றியது. இதையடுத்து கங்குலி...

கேப்டன் தோனிக்கு கோஹ்லி ஆதரவு

தொடர்ந்து எட்டு டெஸ்டில் தோற்றதால், கேப்டன் தோனியை குறை சொல்லக் கூடாது. ஏனெனில், இவரது தலைமையில் தான் இரண்டு உலக கோப்பை வென்றோம், டெஸ்டில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினோம்,'' என, இந்திய அணியின் விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்தியா வரும் இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ., 15ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது.  விராத் கோஹ்லி கூறியது: பொதுவாக...

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கோப்பையை வெல்வது யார்?

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது.  முதலாவது அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும், நேற்று செஞ்சூரியனில் நடந்த 2-வது அரைஇறுதியில் வெற்றி பெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சிட்னி வீரர்களின் ஆட்டம்...

அஷ்வின் சம்பளம் ரூ. 1 கோடி

வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலில், "ஏ' கிரேடில் இடம் பெற்றார் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இவர், ஆண்டுக்கு ரூ. 1 கோடி சம்பளம் பெறுவார். ஹர்பஜன், இஷாந்த் சர்மா ஆகியோர் அடுத்த பிரிவுக்கு தள்ளப்பட்டனர். இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) மத்திய ஒப்பந்த கமிட்டி, ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் திறமை அடிப்படையில் ஒப்பந்த பட்டியலை வெளியிடுகிறது. இதில் "ஏ' கிரேடில் இடம் பெறும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். "பி' கிரேடு...

சதம் அடிப்பவர்கள் மட்டும் சிறந்த ஆட்டக்காரர் அல்ல

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவின் கவுதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி வருகின்றனர். இந்த ஜோடி எந்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.  சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் விளையாடியும் இந்த ஜோடி 26 ரன்களை மட்டுமே பெற்றது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.  இந்நிலையில் அடுத்த மாதம்...

நாங்க தான் சிறந்த துவக்க ஜோடி - காம்பிர்

நானும் சேவக்கும் சேர்ந்து சராசரியாக 53 ரன்கள் எடுத்துள்ளோம். உலக கிரிக்கெட் அரங்கில் நாங்கதான் சிறந்த துவக்க ஜோடி,'' என, காம்பிர் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சேவக், காம்பிர். இவர்களது ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மட்டும் அடித்துள்ள சேவக், சராசரியாக 37.26 ரன்கள் தான் எடுத்துள்ளார்.  இந்த காலக்கட்டத்தில் காம்பிரை எடுத்துக் கொண்டால் ஒரு சதம் கூட...

ஐ.பி.எல்., அணிகள் சொதப்பியது ஏன்?

சாம்பியன்ஸ் லீக் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் பெரும் ஏமாற்றம் அளித்தன.  சொந்த மண்ணில் அசத்தும் இந்த அணிகள், வெளிநாட்டில் சொதப்புகின்றன. டில்லி அணி மட்டும் ஓரளவுக்கு திறமை வெளிப்படுத்தியது. தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாதித்த அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா...

அரையிறுதியை உறுதி செய்யுமா டில்லி?

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்று டில்லி டேர்டெவில்ஸ், டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் டில்லி அணி அரையிறுதியை உறுதி செய்யலாம். தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. செஞ்சுரியனில் இன்று நடக்கவுள்ள "ஏ' பிரிவு லீக் போட்டியில் டில்லி, டைட்டன்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதுகின்றன. சேவக் ஆதிக்கம்: டில்லி அணி சேவக்கை தான் பெரிதும் நம்பி உள்ளது. பெர்த் அணிக்கு எதிரான...

முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மரணம்

முன்னாள் ரயில்வே கிரிக்கெட் அணி மற்றும் சிறந்த முதல் தர கிரிக்கெட் வீரருமான ராஜா அலி (36) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக ராஜா இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை உள்ளனர். இடக்கை ஆட்டக்காரரான இவர், ரஞ்சி மற்றும் இரானி கோப்பைகளை வென்ற ரயில்வே அணியில் இடம் பிடித்திருந்தார்.  87 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர், 9 சதங்கள் மற்றும் 22 அரை சதங்களுடன் 4,337 ரன்கள் எடுத்துள்ளார்...

வெற்றியுடன் திரும்புகிறது சென்னை கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் தொடரில் யார்க்ஷயருக்கு எதிரான போட்டியில் சென்னை கிங்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.  தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடர் நடக்கிறது. நேற்று தங்களது கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், யார்க்ஷயர் அணிகள் மோதின. "டாஸ் வென்ற சென்னை கேப்டன் ரெய்னா, "பீல்டிங் தேர்வுசெய்தார்.  யார்க்ஷயர் அணிக்கு லித் (11), காலே (23) ஆறுதல் தந்தனர். மில்லர் 28 ரன்களில் அவுட்டான போதும், பேலன்ஸ் அரைசதம் (58) கடந்து அவுட்டானார். யார்க்ஷயர் அணி 20...

கவலை தரும் காம்பிர், சேவக் பார்ம்

காம்பிர், சேவக்கின் மோசமான "பார்ம்' கவலை அளிக்கிறது,'' என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வருத்தம் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர்கள் சேவக், காம்பிர். சமீபகாலமாக இவர்களது ஆட்டம் மோசமாக உள்ளது.  வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது குறித்து கபில் தேவ் கூறியது:  காம்பிர், சேவக் திறமையான துவக்க வீரர்கள்.  இவர்கள்...

சாம்பியன்ஸ் லீக் T20 - வெளியேறியது சென்னை, மும்பை

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரின் அரையிறுதிக்கு லயன்ஸ் அணி முன்னேறியது. இதனால் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் சென்னை, மும்பை அணிகள் வெளியேறுகின்றன. தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடர் நடக்கிறது.  இதன் "பி பிரிவில் நடந்த முக்கிய போட்டியில் ஹைவெல்டு லயன்ஸ், யார்க்ஷயர் அணிகள் மோதின.  முதலில் விளையாடிய யார்க்ஷயர் அணிக்கு காலே (21), ஜாக்குஸ் (31)கைகொடுக்க, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள்...

சென்னை கிங்ஸ் இக்கட்டான நிலையில் மும்பையுடன் மோதல்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளும் வெற்றியை நோக்கி களம் காணுகின்றன. தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இன்றைய "பி' பிரிவு முக்கிய போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் இருந்து ஏற்கனவே சிட்னி சிக்சர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. மீதமுள்ள...

சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால் அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள்.  ஆனால் அவர் வசிப்பதே இந்தியாவில் .இது சச்சினுக்கு “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்ற ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டின் அறிவிப்புக்கு அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடனின் கருத்து அல்ல எரிச்சல். அரசுமுறை பயணமாக இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு, இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு...

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி மைதானங்கள் மாற்றம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.   வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி நடைபெறும். அதன்பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும்.   இந்நிலையில்...

இங்கிலாந்து டெஸ்ட் - ரெய்னாவுக்கு பதில் யுவராஜ்சிங்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.  வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.  20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி வரை நடைபெறும். பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில்...

சென்னை சொதப்பல் கிங்ஸ்

லயன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்ற சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அபாரமாக ஆடிய லயன்ஸ் அணி கடைசி ஓவரில் "திரில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவில், நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கேப்டவுனில் நேற்று இரவு நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் சென்னை சூப்பர்...