பிரட் லீ-பிரீத்தி காதலா?

பாலிவுட் நட்சத்திரம் பிரித்தி ஜிந்தா, ஆஸ்திரேலிய வேகப்புயல் பிரட் லீ யை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தா. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி சார்பில் விளையாடி வருகிறார் பிரட் லீ. உரிமையாளர், வீரர் என்ற நிலையில் இருந்த இவர்களது பழக்கம், காதலாக மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை பிரட் லீ யின் மானேஜர் மாக்ஸ்வெல் மறுத்துள்ளார்.


இது குறித்து இவர் கூறியது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன், லண்டனில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரித்தியை சந்தித்தார் பிரட் லீ. அது முதல் இருவரும் நட்பு முறையில் பழகி வருகின்றனர். தற்போது அவரது அணியிலேயே பிரட் லீ விளையாடி வருகிறார். இருவருக்கும் இடையிலான உறவு, தொழில் தொடர்பானது. பிரித்தி அறிவு மிக்கவர். மீடியாக்கள் வெளியிடம் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு மாக்ஸ்வெல் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment