டேவிட் ஹசி, பிராக்கன் அதிரடி நீக்கம்

ஆஸ்திரேலிய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து டேவிட் ஹசி, நாதன் பிராக்கன் உள்ளிட்ட ஐந்து முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டனர்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு (சி.ஏ.,), 2010-11ம் ஆண்டுக்கான 25 பேர் கொண்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் டேவிட் ஹசி, நாதன் பிராக்கன், ஸ்டீவர்ட் கிளார்க், கிரகாம் மானவ், பிராட் ஹாட்ஜ் உள்ளிட்ட ஐந்து முன்னணி வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இப்பட்டியலில் ரியான் ஹாரிஸ், கிளின்ட் மெக்கே, டிம் பெய்னே, ஸ்டீவன் ஸ்மித், ஆடம் வோஜஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்கள் புதிதாக இடம் பிடித்தனர்.


லீ வாய்ப்பு:

காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த, வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ, இப்பட்டியலில் இடம் பிடித்தார். "டுவென்டி-20' வீரர் என்ற அடிப்படையில் ஷான் டெய்ட் வாய்ப்பு பெற்றார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஹில்டிச் கூறுகையில், ""கடந்த 12 மாதங்களாக, வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு, வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்பட்டியலில் இடம் பிடித்த வீரர்கள், குறைந்தபட்சம் ரூ. 90 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

இதுதவிர போட்டிக்கான சம்பளம், பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்கப்படும். இப்பட்டியலில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து சாதிக்கும்,'' என்றார்

0 comments:

Post a Comment