தெண்டுல்கருக்கு அதிக மவுசு

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு கேப்டன் தெண்டுல்கரின் பங்களிப்பு முக்கியமாக இருந்து வருகிறது.

அதிரடியாக விளையாடுவதோடு மட்டுமின்றி அணி வீரர்களை ஒருங்கிணைத்து அரவணைத்து செல்கிறார். உள்ளூர் வீரர்கள் சிறப்பாக ஆடுவதற்கு அவரது ஊக்கமே காரணம்.


டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு உலக சாதனை படைத்துள்ளார். தெண்டுல்கருக்கு சென்னையில் ரசிகர்கள் ஆதரவு எப்போதுமே அதிகமாக இருக்கும். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அதிரடியாக ஆடி வருவதால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.


அவரது ஆட்டத்தை பார்ப்பதற்காக டிக்கெட் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.தெண்டுல்கர் 8 ஆட்டத்தில் 349 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 72 ரன் எடுத்துள்ளார். 4 அரை சதம் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 140.72 ஆகும்.

0 comments:

Post a Comment