கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் (153) விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.
அவரது இந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
150-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர்.
இவர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் 1955 ஜூலை 27-ல் பிறந்தார். இடது கை ஆட்டக்காரரான பார்டர், தனது 16 வயதில் சிட்னி அணிக்காக களமிறங்கினார். ஆரம்பத்தில் பந்து வீச்சாளராக களமிறங்கிய பார்டர், பின்னாளில் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தார்.
1978-ல் மெல்போர்னில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் (ஆஷஸ் தொடர்) தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார் பார்டர்.
அதன் பிறகு மெல்போர்னில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சதம் (162) உள்பட 521 ரன்கள் குவித்தார். அதன் பிறகு, 1979 நவம்பரில் பெர்த்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து (115) 1000 ரன்களை கடந்தார். இதன்மூலம் 354 நாள்களில் 1000 ரன்களை கடந்த முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையையும் பெற்றார்.
1987-ல் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தது அவரது கிரிக்கெட் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. 1994-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பார்டர் 27 சதம், 63 அரை சதம் உள்பட 11174 ரன்கûளையும், 39 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 273 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 சதம், 39 அரை சதம் உள்பட 6524 ரன்களும் 73 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு (93) தொடர்ந்து கேப்டனாக இருந்து சாதனை படைத்தவர். கேப்டனாக இருந்து அதிக ரன்களை (6,623) குவித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.
உலகிலேயே அதிக டெஸ்ட் இன்னிங்ஸ்களில் (265) விளையாடியவர். குறைந்தபட்சம் 50 ரன்களுக்கு மேல் 90 முறை விளாசி சிறப்பு பெற்றவர்.
1982-ம் ஆண்டில் விஸ்டனால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
0 comments:
Post a Comment