ஐபிஎல் கொச்சி அணி உரிமையை விட்டுத்தர சுனந்தா முடிவு

ஐபிஎல் கொச்சி அணி தொடர்பாக எழுந்த சர்ச்சையில் மத்திய அமைச்சர் சசி தரூர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த அணியின் உரிமையை விட்டுத்தர தரூரின் தோழி சுனந்தா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


ரென்டெஸ்வோஸ் ஸ்போர்ட்ஸ் வோர்ல்டு என்னும் நிறுவனம் ஐபிஎல் கொச்சி அணியை வாங்கியது. அந்த அணியில் 19 சதவீதப் பங்காக ரூ. 70 கோடி சுனந்தா முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், அந்த அணி வாங்கப்பட்டதில் சசி தரூர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பலமாக கோரிக்கை விடுத்துள்ளன.


இதையடுத்து, கொச்சி அணியில் தனது உரிமையை திரும்ப ஒப்படைக்க சுனந்தா முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதுகுறித்து சுனந்தா எதுவும் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.

0 comments:

Post a Comment