ஐ.பி.எல்., பைனலில் அவமானம்

ஐ.பி.எல்., தொடர் முடிந்த போதும், சர்ச்சைகள் தொடருகின்றன. பைனலை காண வந்த இந்திய முன்னாள் கேப்டன் நரி கான்ட்ராக்டர், மைதானத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வைத்திருந்தது போலி டிக்கெட் என்று கூறி, அவமானப்படுத்தியுள்ளனர்.சமீபத்தில் மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. நவி மும்பையில் நடந்த பைனலில் சென்னை கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது. இப்போட்டியை காண, டி.ஒய் பாட்டீல் மைதானத்துக்கு வந்த நரி கான்ட்ராக்டருக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சோகத்துடன் திரும்பியுள்ளார். இது குறித்து இவர்...

சச்சின் "அட்வைஸ்' கைகொடுக்கும்

பெண்களுக்கான உலக கோப்பை ("டுவென்டி-20') தொடரில் சாதிக்க, சச்சின் வழங்கிய ஆலோசனை கைகொடுக்கும்,'' என இந்திய அணி கேப்டன் ஜுலான் கோஸ்வாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீசில், பெண்களுக்கான "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணியினர் நேற்று, வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர். "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வரும் மே 6ம் தேதி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இதற்கு முன் வரும் மே 2, 3ம் தேதிகளில் முறையே இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுடன்...

பி.சி.சி.ஐ., மீது லலித் மோடி வழக்கு

ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து தன்னை "சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ., மீது வழக்கு தொடுக்க லலித் மோடி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்னணி வக்கீல்களான ராம் ஜெத்மலானி, ஹரிஷ் சால்வே ஆகியோரை சந்தித்து பேசினார்.இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. கொச்சி அணியின் பங்குகள் தொடர்பாக இவருக்கும் சசி தரூருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்னையில் மத்திய அமைச்சர் பதவியை சசி தரூர் ராஜினாமா செய்தார். இதையடுத்து லலித் மோடிக்கு நெருக்கடி அதிகமானது. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பங்குகளில் முறைகேடு,...

ஐ.பி.எல். - ரூ.51 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் மிகப்பெரிய அளவில் “பெட்டிங்” (சூதாட்டம்) நடைபெற்று உள்ளது.எந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும், இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் எவை, அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது யாருக்கு கிடைக்கும் என்பது, முதலில் பேட்டிங் செய்வது யார் என்பது உள்பட பல்வேறு வகைகளில் பெட்டிங் நடந்து உள்ளது. மொத்தம் உள்ள 60 ஆட்டத்தில் ரூ. 51 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடை பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு ஆட்டத்துக்கான சராசரி பெட்டிங் ரூ. 830 கோடியாகும். இறுதிப் போட்டியில் மும்பை அணிதான்...

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்

2-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. அப்போது மேட்ச்பிக்சிங் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. ஆனால் அப்போது சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் சங்கம் மறுத்து உள்ளது. ஆனால் ஐ.பி.எல். மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய வருமான வரி அதிகாரிகள் 2009 ஐ.பி.எல்.லில் சூதாட்டம் நடந்ததை கண்டு பிடித்து உள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 27 வீரர்களும் அதிகாரி ஒருவரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னணி வீரர்கள் ஆவர். போட்டியில் ஆடிய மற்றும் ஆடாத வீரர்களுக்கும் இதில்...

வார்னரை கவர்ந்த சேவக்

டுவென்டி-20' ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை, இந்திய வீரர் சேவக் அதிகம் கவர்ந்துள்ளார்.ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் துவக்க வீரர்களாக, இந்தியாவின் அதிரடி வீரர் சேவக், ஆஸ்திரேலியாவின் வார்னர் விளையாடினர். இது இவர்கள் இடையே நட்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது சேவக், வார்னரிடம் கூறுகையில்,""நீங்கள் தேசத்துக்காக அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதாவது டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். இதில் தான் அனைத்து விதமான வகையிலும் அடித்து விளையாடலாம். அப்போது ஒரு நாளில் நான் எடுத்த 284 ரன்கள் என்ற சாதனையை, 300 ரன்கள் எடுத்து,...

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக்

இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கும்,'' என, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' போட்டி நடக்கும். இதில் ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று இடம் பிடித்த அணிகள், தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து இரண்டு மற்றும் நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீசில் இருந்து தலா ஒரு அணிகள் என மொத்தம் 12 அணிகள், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும். கடந்த ஆண்டு நடந்த முதல் தொடரில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி சாம்பியன்ஸ்...

உலக கோப்பை தொடரில் சாதிப்பேன்: யுவராஜ்

உலக கோப்பை ("டுவென்டி-20') கிரிக்கெட் தொடரில் சாதிப்பேன்,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீசில், 3வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங், 3வது ஐ.பி.எல்., தொடரில் சோபிக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணி, படுதோல்வி அடைந்து கடைசி இடம் பிடித்தது.இது குறித்து யுவராஜ் கூறியதாவது: ஐ.பி.எல்., தொடரில் சோபிக்காதது வருத்தமளிக்கிறது. மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்ட...

ஐ.பி.எல்., சூதாட்டம் - 27 வீரர்களுக்கு தொடர்பு

தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்.,தொடரின் போது பெருமளவு கிரிக்கெட் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் 27 வீரர்களுக்கு தொடர் இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.கடந்த 2000ல் தென் ஆப்ரிக்க அணி, இந்தியா வந்த போது சூதாட்ட பிரச்னை முதல்முறையாக விஸ்வரூபமெடுத்தது. சூதாட்ட புக்கிகளிடம் கோடிகளை பெற்றுக் கொண்டு, போட்டிகளை வேண்டுமென்றே வீரர்கள் விட்டுக் கொடுத்த விபரம் அம்பலமானது. இதில் தொடர்புடைய தென் ஆப்ரிக்காவின் குரோனியே, இந்தியாவின் அசார், ஜடேஜா போன்றவர்களுக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் சூதாட்ட பிரச்னை...

"ஹேப்பி பர்த்டே' சச்சின்!

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று 37வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுத்து வரலாறு படைத்த இவர், தொடர்ந்து பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார்.கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்தார் சச்சின். தனது 16வது வயதில், 1989ல் இந்திய அணியில் அறிமுகமான இவர், 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், சதம் எடுத்து சாதித்துள்ளார். மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும், விரல் பகுதியில் ஏற்பட்டுள்ள...

வீழ்ச்சிப் பாதையில் ஐ.பி.எல்.,

குறுகிய காலத்தில் அதிரடி எழுச்சி கண்ட ஐ.பி.எல்., அமைப்பு, வருமான வரித்துறை ரெய்டு, சூதாட்டப் புகார்களில் சிக்கி, தனது செல்வாக்கை இழக்கத் துவங்கியுள்ளது. அசுர வளர்ச்சி:இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நேரடி கட்டுப்பாட்டில் கடந்த 2008 ம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்., ) அமைப்பு துவக்கம் கண்டது. இதன் தலைவராக லலித் மோடி நியமிக்கப்பட்டார். முதல் ஐ.பி.எல்., தொடரை (2008) வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் மோடி. அதற்குப் பின் 2009 ம் ஆண்டு இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை, லோக்சபா தேர்தல் காரணமாக இந்தியாவில் நடத்த முடியவில்லை....

ஐ.பி.எல். - பெங்களூரு ரசிகர்கள் ஆவேசம்

அரையிறுதிக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகளின், பணத்தை திருப்பித் தருவதில், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டு அரையிறுதி போட்டிகள், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் லீக் போட்டியின் போது ஏற்பட்ட, குண்டு வெடிப்புகள் காரணமாக போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டது.ஏற்கனவே 2 அரையிறுதிப் போட்டிக்குரிய டிக்கெட்டுகள், இங்கு விற்கப்பட்டுள்ளன. இதற்குரிய பணத்தை, மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10 மணி முதல், சின்னச்சாமி மைதானத்தின்,...

சேவக் "அவுட்': முரளி விஜய் வாய்ப்பு

"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக சேவக் நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதில், தமிழக வீரர் முரளி விஜய் வாய்ப்பு பெற்றுள்ளார்.மூன்றாவது உலக கோப்பை "டுவென்டி-20' தொடர், வரும் ஏப். 30ல் வெஸ்ட் இண்டீசில் துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட, 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பெற்றிருந்த சேவக்கிற்கு, ஐ.பி.எல்., தொடரின் போது மீண்டும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து இந்திய...

ஐ.பி.எல்., விருது யாருக்கு?

ஐ.பி.எல்., விருதுக்கு முரளி விஜய், ராபின் உத்தப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மும்பையில், வரும் 23ம் தேதி சகாரா நிறுவனம் சார்பில் ஐ.பி.எல். விருது வழங்கும் விழா நடக்கிறது. இதற்கு, லீக் சுற்றில் வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் 22 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் 10 விருதுக்கான வீரர்களை ஆறு பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும் ஒருவீரர் தேர்வு செய்யப்படுவார். முக்கிய பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல்: சிறந்த பேட்ஸ்மேன்: காலிஸ், சச்சின்,...