டென்னிஸ்: சானியா ஜோடி முன்னேற்றம்

ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் சானியா, அமெரிக்காவின் பெத்தானிக் ஜோடி முன்னேறியது.

கனடாவில் நடக்கும் இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா ஜோடி, ஜெர்மனியின் ஜுலியா, செக் குடியரசின் கெவிட்டாவை சந்தித்தார்.

டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை சானியா ஜோடி 7-6 என கைப்பற்றியது. இரண்டாம் செட்டிலும் அசத்திய சானியா ஜோடி 6-3 என வென்றது.

முடிவில், சானியா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

0 comments:

Post a Comment