20 ஓவர் உலக கோப்பை - இந்திய அணி நாளை தேர்வு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணி நாளை (10-ந்தேதி) அறிவிக்கப்படுகிறது.

ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறார்கள். புற்றுநோயில் இருந்து குணமடைந்த யுவராஜ்சிங் அணியில் இடம் பெறுகிறார். அவர் ஏற்கனவே உத்தேச அணியில் இடம் பெற்று உள்ளார்.

இலங்கை தொடரில் மோசமாக ஆடிய ரோகித் சர்மா நீக்கப்படுகிறார். அவர் இடத்தில்தான் யுவராஜ்சிங் இடம் பெறுகிறார். மற்றப்படி இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

இதேபோல நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியும் நாளை தேர்வு செய்யப்படுகிறது.

டிராவிட் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இடத்தில் புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதேபோல ரெய்னா, ரகானே, பத்ரிநாத் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கான வாய்ப்பில் உள்ளனர். நியூசிலாந்து அணி இந்த மாதம் இந்தியா வருகிறது.

2 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் (செப்டம்பர் 8 மற்றும் 11-ந்தேதி) விளையாடுகிறது.

0 comments:

Post a Comment