
கடின சிகிச்சைக்கு பின் மிக விரைவாக மீண்ட யுவராஜ், இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி கேன்சரால் பாதிக்கப்பட்ட சாமான்ய மனிதர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்,'' என, சச்சின் தெரிவித்தார்.இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 30. கடந்த ஆண்டில் நுரையீரலில் ஏற்பட்ட கேன்சர் கட்டிக்காக "கீமோதெரபி' சிகிச்சை மேற்கொண்டார். இதிலிருந்து விரைவாக மீண்ட இவர், கடின பயிற்சியில் ஈடுபட்டார். இலங்கையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள...