தோனிக்கு தடை: சேவக் புதிய கேப்டன்

நாக்பூர் போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்துவீசியதற்காக, கேப்டன் தோனிக்கு இரண்டு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளுக்கு சேவக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாக்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் தோல்வி அடைந்தது. இப்போட்டியின் கடைசி கட்டத்தில் இந்திய வீரர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால் வீணாக தாமதம் ஏற்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீச முடியவில்லை. சுமார் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து "மேட்ச் ரெப்ரி' ஜெப் குரோவ் விசாரணை நடத்தினார். பின்னர் கேப்டன் தோனிக்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தார். தவிர, இந்திய அணியின் வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

தோனிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருவதால், இலங்கைக்கு எதிரான மூன்றாவது(டிச., 21, கட்டாக்), நான்காவது(டிச., 24, கோல்கட்டா) ஒரு நாள் போட்டிகளுக்கு சேவக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனிக்கு பதிலாக தமிழக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் தோனி முறையே 72, 107 ரன்கள் எடுத்தார். இவர் இல்லாதது இந்திய அணிக்கு வரும் போட்டிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்

0 comments:

Post a Comment