ஒரு நாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை இந்திய கேப்டன் தோனி பெற்றார்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 46 ரன்களை எடுத்தபோது அவர் 5 ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார். தற்போது அவர் 152 ஆட்டங்களில் விளையாடி 5026 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் ஒரு நாள் போட்டிகளில் 200 வீரர்களை ஆட்டமிழக்க (ஸ்டம்பிங், கேட்ச்) செய்த பெருமையையும் தோனி பெற்றார். ராஜ்கோட் ஆட்டத்தில் அவர் 2 ஸ்டம்பிங்குகளைச் செய்து இந்த சாதனையை படைத்தார்.
0 comments:
Post a Comment